
இதை ஆபிரிக்கா மற்றும் பிரிட்டனிலும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தோனியின் நெடுங்கால நண்பரும் முன்னாள் வீரருமான மிஹிர் திவாகர் ஆர்கா ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதே நிறுவனம் தான் இந்த அக்கடமியையும் நடத்தவுள்ளது.
இதற்காக டுபாயிலுள்ள பசுபிக் வென்ச்சர்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளது. ஆர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனம். இதன்மூலம் உலகெங்கும் இந்த அக்கடமியின் பயன்களைக் கொண்டு செல்வதே திட்டமாகும்.
இது பற்றி தோனியின் நண்பர் திவாகர் ஸ்போர்ட்ஸ் ஸ்டார் இதழுக்கு கூறும் போது இந்த பிராண்டை உலக அளவில் எடுத்துசு“ சென்று வாய்ப்பு கிடைக்காத இளைஞர்களுக்கு கிரிக்கெட்டில் வாய்ப்பளிப்பதே இந்த அக்கடமியின் நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.
என்.ஆர்.ஐ. சிறுவர்களுக்கு கிரிக்கெட் ஆட வாய்ப்பு ஏற்படுத்த இது சிறந்த நடைமேடையாகம். எனவே தான் தோனியின் விருப்பத்துக்கு இணங்க இந்த முÙற்சியில் இறங்கியிருப்பதாக பசுபிக் சென்ச்சர்ஸ் நிறுவனத்தின் பர்வேஸ் கான் தெரிவித்துள்ளார்.
ஆகையால் தான் பிரிட்டன் அமெரிக்கா தென் ஆபிரிக்கா ஆகியவற்றின் உரிமைகளை நாங்கள் எடுத்துக் கொண்டுள்ளோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அக்கடமி டுபாயில் எதிர்வரும் அக்டோபர் மாதம் தோனியால் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த வளாகம் ஸ்பிரிங்டேல் பள்ளில் உள்ளது. இங்கு சிறந்த வசதிகள் பிட்ச்கள் உள்ளன.
ஏற்கனவே லக்னோ குர்கவானில் இரண்டு அக்கடமிகளைத் தொடங்கியுள்ளார் தோனி. ஆனால் டுபாயில் தொடங்கப்படுவது சர்வதேச முயற்சியாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அக்கடமியில் தோனியே அனைத்தையும் கவனித்துக் கொள்வார். பயிற்சி முறைகள் முதல் தலைமைத்துவ பண்புகளை வளர்த்து விடுவது வரை தோனி செயற்படுவார் இது இளைஞர்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதம் என்கிறது பசுபிக் சென்ச்சர்ஸ் நிறுவனம்.
Post a Comment