Ads (728x90)

லக்னோ: உ.பி., மாநிலத்தில் உட்கல் எக்ஸ்பிரஸ் ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 6 பெட்டிகள் சேதமுற்றது, பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது. 20 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க மருத்துவ சேவை வாகனங்கள் தயாராக உள்ளது.
பலி எண்ணிக்கை மேலும் கூடும் என அஞ்சப்படுகிறது.
உ.பி மாநிலம் முசாபர் நகர் அருகே பூரி -ஹரித்வார்-கலிங்கா எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது கத்தவுலி என்ற இடத்தில் ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது
ரயில் விபத்தில் சிக்கியோரை மீட்க 44 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புகுழுவினர் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு உத்தரவிட்டுள்ளார்

Post a Comment

Recent News

Recent Posts Widget