Ads (728x90)

லண்டனில் இருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு வந்த இருவர் நுவரெலியாவில் படகு விபத்தில் சிக்கியுள்ளனர். குறித்த சம்பவம் நுவரெலியா - Gregory ஏரியில் நேற்று மாலை வேளையில் நடந்துள்ளது. இதன்போது ஏரியில் விழுந்த இரு பெண்களையும் இலங்கை கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர். லண்டனில் வசித்து வரும் இவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர். சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு இலங்கை வந்திருந்த போதே குறித்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. நுவரெலியாவில் Gregory ஏரியில் படகில் சென்ற போது குறித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. இதன்போது இரு பெண்களும் நீரில் விழுந்து தத்தளித்துள்ளனர். இதன்போது, சம்பவ இடத்திற்கு விரைந்த இலங்கை கடற்படையினர் இருவரையும் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget