Ads (728x90)

ராஜமவுலியின் பாகுபலி-2 படத்தில் நடித்து முடித்த பிரபாஸை உடனடியாக அடுத்த படத்தில் நடிக்க வைக்க சில தெலுங்குப்பட நிறுவனங்கள் துரத்தின. ஆனால் அவரோ, எனக்கு சிலகாலம் ஓய்வு தேவைப்படுகிறது என்று சொல்லி, கடந்த ஆறு மாத காலமாக ஓய்வில் இருந்து வந்தவர், தற்போது ரன் ராஜா ரன் தெலுங்கு படத்தை இயக்கிய சுஜீத் இயக்கும் சாஹோ படத்தில் நடிக்கிறார்.

மேலும், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் தயாராகும் இந்த படத்தில் பாலிவுட் நடிகர் நீல்நிதின் முகேஷ் வில்லனாக நடிக்கிறார். பாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூர் நாயகியாக நடிக்கிறார். இந்த சாஹோ படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கினாலும், பின்னர் ஐரோப்பா, அபிதாபி, ருமேனியா ஆகிய நாடுகளில் நடக்கிறது. ஆக்சன் கதையில் உருவாகும் சாஹோ படத்திற்கு ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் கென்னி பேட்ஸ் சண்டை பயிற்சி கொடுக்கிறார்

Post a Comment

Recent News

Recent Posts Widget