
நேற்று அதைச் சரியாகவே செய்தார் கமல்ஹாசன். ஈடுபாடு குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கள் மிகச் சிறந்தவை. “இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க வேண்டும் என்று வந்த பிறகு நான் முழு ஈடுபாட்டுடன் அதைச் செய்து வருகிறேன். நீங்களும் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் வந்தீர்கள். ஆனால், அதை ஈடுபாட்டுடன் செய்வது போலத் தெரியவில்லை. உங்களை நம்பி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கொடுத்தால் பாதியில் ஓடி விடுவீர்கள் போலிருக்கிறதே?,” என போட்டியாளர்களைப் பார்த்து கடும் கோபத்துடன் சொன்னார்.
மைக்கை மூடிக் கொண்டு பேசுவது, கழட்டி வைத்துவிட்டுப் பேசுவது, டாஸ்க்குகளில் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பது, பிக் பாஸ் அழைத்துப் பேசினால் அவரை அவமரியாதை செய்வது என போட்டியாளர்கள் செய்யும் தவறுகளை கடுமையாகச் சுட்டிக் காட்டிவிட்டு, இப்படி பொறுப்பற்று இருக்கும் உங்களுடன் பேச விருப்பமில்லை என அவர்களிடம் சொல்லிவிட்டு அவர்களுடன் உரையாடும் நிகழ்வு வேண்டாம் என கட் செய்யச் சொன்னார். ரைசா, காயத்ரி தவிர ஏனைய போட்டியாளர்கள் அவர்கள் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டனர். ரைசா, நான் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். காயத்ரி அது கூட சொல்லாமல் அமைதி காத்தார்.
அதன் பின், புதிதாக போட்டிக்குள் வந்த சுஜா, ஹரிஷ், காஜல் ஆகியோரிடம் மட்டும் தனித் தனியாக உரையாடினார் கமல்ஹாசன். நேயர்கள் கேட்ட கேள்விகளை புதிய போட்டியாளர்கள் மூலம், பழைய போட்டியாளர்களிடம் கேட்க வைத்தார். நேயர்களின் பல கேள்விகள் வெளிப்படையாக இருந்தன. இருந்தாலும் கோபப்படாமல் போட்டியாளர்கள் அவற்றிற்கு பதிலளித்தனர்.
எவிக்ஷனில் இருப்பதால்தான் ரைசா, காயத்ரி கமல்ஹாசனிடம் மன்னிப்பு கேட்கவில்லையோ என்று தோன்றுகிறது. இன்றாவது அவர்கள் மன்னிப்பு கேட்பார்களா ?, கமல்ஹாசன் அவர்களுக்குத் தக்க பாடம் புகட்டுவாரா ?, இன்று வெளியேறப் போது காயத்ரியா ?, என்ற ஆர்வத்துடன் இன்றைய நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்
Post a Comment