Ads (728x90)

பிரபலங்கள் என்று பிக் பாஸ்-தான் சொல்கிறார், நாம் சொல்லவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒரே பிரபலம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் கமல்ஹாசனா அல்லது பரபரப்பை ஏற்படுத்தி விலகிய நடிகை ஓவியாவா, என்பதை அவர்களே வாக்கெடுப்பு நடத்தி தெரிந்து கொள்ளலாம். ஆனால், நிகழ்ச்சியில் மேலும் பிரபலங்கள் என கடந்த மூன்று நாட்களாக பிக் பாஸ் வீட்டிற்குள் புதியவர்கள் நுழைந்திருக்கிறார்கள்.

நேற்று முன் தினம் நடிகை சுஜா வருணி, நேற்று நடிகர் ஹரீஷ் கல்யாண், இன்று காஜல் பசுபதி. எந்த அடிப்படையில் இந்த புதியவர்களை பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்புகிறார்கள் என்பதைப் பற்றி நாளை சனிக் கிழமை கமல்ஹாசன் கண்டிப்பாக விளக்குவார் என எதிர்பார்க்கலாம்.

பிந்து மாதவியாவது கமல்ஹாசனை சந்தித்துவிட்டு பல்லக்கில் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். ஆனால், இந்த வாரம் நுழைந்துள்ள மூன்று பிரபலங்களும் கமல்ஹாசனை சந்திக்காமல் நேரடியாகவே வீட்டிற்குள் நுழைந்துள்ளார்கள். சுஜா வருணி கிரேன் மூலம் வீட்டிற்குள் இறக்கி விடப்பட்டார். ஹரீஷ் கல்யாண் சுவர் ஏறிக் குதித்து வீட்டிற்குள் நுழைந்தார். இன்று நுழைந்துள்ள காஜல் பசுபதி ஆட்டோ மூலம் உள்ளே சென்றுள்ளார். ஆட்டோவில் வந்த அடுத்த சூறாவளி என புரோமோவும் வெளியிட்டுவிட்டார்கள்.

இந்த வாரம் எவிக்ஷனில் காயத்ரி வெளியேறவே அதிகம் பேர் வாக்களித்துள்ள நிலையில், ஓவியா கண்டிப்பாக பிக் பாஸ் வீட்டிற்குள் திரும்ப போகவே மாட்டேன் என அறிவித்துள்ள நிலையில், இந்த வார புதுவரவுகள் சூறாவளியாக இருப்பார்களா இல்லையா என்பது வரும் வாரங்களில் தெரியும்.

இதனிடையே காஜல் பசுபதி தொடர்பான புரொமோவை வெளியிட்ட விஜய் டிவி., சற்றுநேரத்திலேயே அதை தனது டுவிட்டர் பக்கத்திலிருந்து நீக்கிவிட்டது. நீக்கத்திற்கான காரணம் தெரியவில்லை.

Post a Comment

Recent News

Recent Posts Widget