பண்ணை, மண்டைதீவு கடற் பகுதியில் சற்றுமுன்னர் நடந்த படகு விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில் அவரது உடலும் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர்கள் இம்முறை உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
மண்டை தீவுக்கு அருகில் உள்ள படகு தரிப்பிடம் ஒன்றில் இருந்து படகில் சென்ற சமயமே இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
அந்தப் பகுதியில் கட்டப்பட்டிருந்த படகு ஒன்றை எடுத்து கடலுக்குச் சென்றபோதே இந்த இடர் நடந்துள்ளது என்று கூறப்படுகின்றது.
படகில் ஏழு பேர் பயணித்துள்ளனர். அவர்களில் ஐவர் நீரில் மூழ்கிய உயிரிழந்துள்ளனர். ஒருவரைக் காணவில்லை. ஒருவர் நீந்திக் கரை சேர்ந்துள்ளார்.
நீந்திக் கரை சேர்ந்தவர் உட்பட நான்கு பேர் தற்போது பொலிஸரால் கைது செய்யப்பட்டுளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
உயிரிழந்த மாணவர்களின் உறவினர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தற்போது குழுமியுள்ளனர். அந்தப் பகுதியே சேகமயமாகக் காணப்படுகின்றது.
பண்ணை, மண்டதீவு கடற் பகுதியில் சற்றுமுன்னர் நடந்த படகு விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவரைத் தேடும் பணி நடைபெறுகின்றது. உயிரழிந்தவர்கள் இம்முறை உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment