உள்நாட்டில் பசி, பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் அடைக்கலம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக
படையெடுத்தபடியே உள்ளனர். இந்நிலையில் படகுகள் மூலம் ஐரோப்பா தப்பி செல்ல முயன்று மத்திய தரைக்கடல் பகுதியில் தத்தளித்த 251 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். ஐரோப்பாவிற்கு சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்ததில் அகதிகள் கடலில் தத்தளித்துள்ளனர். இந்நிலையில் அந்த வழியாக சென்ற அரசு சாரா தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் அவர்களை மீட்டுள்ளனர்.
காப்பாற்றப்பட்டவர்களில் பெரும்பாலும் வடக்கு சூடான், எகிப்து உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள். அவர்களில் பெரும்பாலும் ஆதரவற்ற சிறுவர்களும், கர்ப்பிணி பெண்களும் இருந்துள்ளனர். ஏற்கனவே இதுகுறித்து பேசிய இத்தாலிய அரசு, இந்த ஆண்டில் இதுவரை மத்திய தரைக்கடல் பகுதியில் சுமார் 32 ஆயிரம் மக்களை தங்கள் நாட்டு கடற்படையினர் மீட்டுள்ளதாகவும், 650-க்கும் அதிகமானவர்கள் கடலில் விழுந்து காணாமல் போனதாகவும் தெரிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment