Ads (728x90)

கர்நாடகாவில், மீண்டும் காங்கிரஸ் அரசு அமையும்; பா.ஜ., இரண்டாவது இடத்தைப் பிடிக்கும்' என, கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு அமைந்துள்ளது. இங்கு, 2018 துவக்கத்தில், 225 தொகுதிகள் உடைய சட்டசபைக்கு தேர்தல் நடக்க உள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் நடந்தால், அங்கு யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது என்பது குறித்து, 'சி - போர்' என்ற அமைப்பு ஆய்வு நடத்தி, கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

ஜூலை, 19 முதல், ஆகஸ்ட், 10 வரை நடந்த இந்தக் கருத்துக்கணிப்பின் போது, 165 தொகுதிகளில், 24 ஆயிரத்து, 676 பேரிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.கருத்துக் கணிப்பின் முடிவுகளின் படி, காங்., கட்சி, 120 முதல், 132 இடங்களில் வெற்றி பெறும். பா.ஜ., 60 - 72 தொகுதிகளில் வென்று, இரண்டாவது இடத்தைப் பிடிக்கும்.

மதச் சார்பற்ற ஜனதா தளம், 24 - 30 தொகுதிகளில் வெற்றி பெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு, 43 சதவீதம், பா.ஜ.,வுக்கு, 32 சதவீதம், மதச் சார்பற்ற ஜனதா தளத்துக்கு, 17 சதவீத ஓட்டுகள் கிடைக்கும் என, கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் கர்நாடகாவுக்கு சுற்றுப்பயணம் செய்த, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, 150 தொகுதிகளில், பா.ஜ., வெற்றி பெறும் என கூறியுள்ள நிலையில், இந்த கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget