Ads (728x90)


தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, தாங்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை வழங்கினர்.
அதில்,  தங்களின் ஆதரவை முதல்வர் பழனிசாமி இழந்துவிட்டார். அவருக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுகிறோம். அவரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டசபை உடனடியாக கூட்ட வேண்டும் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., தங்கதமிழ்செல்வன் அளித்த பேட்டி: முதல்வர் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டோம் என கவர்னரிடம் மனு அளித்துள்ளோம். அரசு விமர்சித்த ஓபிஎஸ் அழைத்து பதவி கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? துணை முதல்வர் பதவியை பன்னீர்செல்வத்திற்கு வழங்கியது தவறு. சசி சொன்னதால், உங்களுக்கு ஓட்ட போட்டோம். எங்களை நிராகரிக்க காரணம் என்ன ?

முதல்வரை மாற்ற வேண்டும் என கவர்னரிடம் மனு அளித்தோம். பரிசீலனை செய்வதாக கவர்னர் கூறியுள்ளார். ஊழல் அரசு என ஓபிஎஸ் விமர்சனம் செய்தது ஏன்? திமுகவுடன் இணைந்து ஓட்டு போட்டது ஏன்?சட்டசபை கூட்ட வேண்டிய அவசியமில்லை. எங்களது நிலைப்பாட்டை அளித்து வந்துள்ளோம். ஓ.பி.எஸ்., அனைத்து பதவிகளும் வாங்கி கொண்டு விட்டார். அவருடன் இருந்த எம்எல்ஏக்களின் நிலை என்ன. இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget