யாழ்ப்பாண குடாநாட்டின் கரையோரப் பிரதேசங்க ளில் சட்டவிரோதமாக மணல் அகழும் பகுதி களை அரச வான் படையினர் நேற்று முன்தினம் உலங்குவானூர்தியில் சென்று வானிலிருந் தவாறே பார்வையிட்ட னர். அந்த இடங்களை அவர்கள் வானிலிருந்த வாறே ஒளிப்படங்களும் எடுத்தனர்.
யாழ்ப்பாண குடாநாட்டின் வான் பரப்பில் உலங்குவா னூர்தி நேற்று முன்தினம் வட்டமிட் டது. அரியாலை, பாசை யூர், ஊர்காவற்றுறை, வட மராட்சி கிழக்கு போன்ற பிரதேசங்கள் உலங்குவா னூர்தி ஊடாக கண்காணிக்கப்பட்டன.
அந்தப் பிரதேசங்களை அரச வான் படையினர் ஒளிப்படமும் எடுத்துக் கொண்டனர்.‘‘நாட்டின் பல பாகங்களி லும் காடுகள், கனியவள பிரதேசங்கள் போன்றவற்றை அரச வான் படையினர் மாதம் ஒருதடவை உலங்குவானூர்தியில் சென்று பார்வையிடுகின்றனர். அவற்றை ஒளிப்படம் எடுத்து வருகின்றனர்” என்று வான் படைத் தலைமையகம் தெரிவித்தது.
சட்டவிரோதமாக மணல் அகழ்வு இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுக்கும் நடவடிக்கையில் இளைஞன் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். அந்த இளைஞன் கொலைக் குற்றச்சாட்டில் 2 பொலிஸார் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர.
இளைஞன் கொலையைத் தொடர்ந்து வடமராட்சி துன்னாலையில் குழப்பநிலை ஏற்பட்டது. அதனைச் சாதகமாகப் பயன்படுத்திய சிலர் இரவு பகலாக டிப்பர்கள், உழவு இயந்திரங்களில் சட்டவிரோதமாக மணல் ஏற்றினர். குழப்பம் செய்த குற்றச்சாட்டில் பலர் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோதமாக மணல் அகழப்படும் சம்பவங்கள் வடமராட்சி கிழக்கில் மட்டுமன்றி யாழ்ப்பாணக் குடாநாட்டின் ஏனைய இடங்களிலும் தொடர்கின்றன என்று தெரிவிக்கப்பட்டது.
Post a Comment