
மொனராகலையில் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 17 வயதுடைய இளம்பிக்கு ஒருவர் நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்திற்கருகில் மீட்கப்பட்டுள்ளார். ஆடைகளின்றிக் காணப்பட்ட இவரை அவதானித்த மக்கள் அவருக்கு ஆடைகளை வழங்கி, பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். குறித்த பிக்கு மொனராகலையில் வைத்து ஞாயிற்றுக்கிழமை கடத்தப்பட்டுள்ளார்.
அவ்வாறு கடத்தப்பட்டவர் தொடர்பில் எந்தவிதமான தகவலும் தெரிந்திருக்கவில்லை. இந்த நிலையிலேயே இவர் யாழ்ப்பாணம் தொடருந்து நிலையத்துக்கு அருகில் கைவிடப்பட்டுள்ளார். என்று பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பொலிஸார் பிக்குவை அழைத்துச் சென்றதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment