தேசிய அரசில் இருக்கும் அமைச்சர்கள் பலருக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக முன்னாள் அரசதலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
களுத்துறை இராணுவ ஒன்றிணைந்த அமைப்பினால் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், தனக்கும், தனது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராகவும், அவதூறு பரப்பும் வகையில் தேசிய அரசின் அமைச்சர்கள் தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் அவர்களுக்கு எதிராக மானநஷ்ட வழக்கு தொடரவுள்ளதாக கூறியுள்ள அவர், இதற்கான பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, முன்னாள் அரசதலைவர் மகிந்த ராஜபக்சவின் மனைவி உள்ளிட்ட மகன்மார்கள் கடந்த வாரம் சீ.ஐ.டி மற்றும் எப்.சீ.ஐ.டியினால் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டிருந்தனர்.
ரக்பி வீரர் வசீம் தாஜூதீன் படுகொலை மற்றும், சுப்ரீம் ஜெட் – 1 எனும் செயற்கைக் கோள் தொடர்பில் கடந்த வாரம் ஷிரந்தி ராஜபக்ச, யோசித்த ராஜபக்ச மற்றும் ரோஹித்த ராஜபக்ச ஆகியோர் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment