Ads (728x90)

நூற்றாண்டிற்கு பின் அமெரிக்காவில் நிகழ்ந்த சூரிய கிரகண தனத்தன்று கூகுளின் புதிய ஆண்ட்ராய்டு 8.0 இயங்குதளம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆண்ட்ராய்டு 8.0 ஏற்கனவே அதிகம் எதிர்பார்க்கப்பட்டதை போன்றே ஓரியோ என அழைக்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு டெவலப்பர்களுக்கு மார்ச் மாதம் முதல் பிரீவியூ வழங்கப்பட்ட புதிய இயங்குதளத்திற்கான அப்டேட்கள் மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வழங்கப்பட்டது.

புதிய இயங்குதளத்தில் வழங்கப்பட்டுள்ள பல்வேறு புதிய அம்சங்கள் நேற்று நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய அம்சங்களில் ஐகான் வடிவங்கள், நோட்டிபிகேஷன்களுக்கு புள்ளிகள், அதிகப்படியான பாதுகாப்பு அம்சங்கள், ஆட்டோஃபில் சேவை, ஸ்மார்ட் டெக்ஸ்ட் செலக்ஷன் மற்றும் பிக்சர்-இன்-பிக்சர் மோட் உள்ளிட்டவை இருக்கிறது. சில அம்சங்கள் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. 

யூசர் இன்டர்ஃபேஸ் மற்றும் அனுபவம்:

புதிய இயங்குதளத்தில் வாடிக்கையாளர்கள் கஸ்டம் சேனல்களில் நோட்டிபிகேஷன்களை தனித்தனியாக செட் செய்து கொள்ள முடியும். அந்த வகையில் நோட்டிபிகேன்களின் முக்கியத்துவத்திற்கு ஏற்ப 0 முதல் 4 வரையிலான அளவுகளை செட் செய்து கொள்ள முடியம். இத்துடன் படிக்கப்படாத நோட்டிபிகேஷன்களின் செயலியில் சிறிய புள்ளி மூலம் படிக்க வேண்டியதை உணர்த்தும். 

ஒவ்வொரு நோட்டிபிகேஷன்களுக்கும் தனித்தனி பேக்கிரவுண்டு நிறத்தை டெவலப்பர்கள் தேர்வு செய்து கொள்ள முடியும். இதேபோல் நோட்டிபிகேஷன் டைம்அவுட் உருவாக்க முடியும், இது பயனுள்ள நோட்டிபிகேஷன்களை தவற வடாமல் செய்யும். இத்துடன் குறிப்பிட்ட நேரத்தை பதிவு செய்தால், நோட்டிபிகேஷன்கள் தானாக அழிந்து போகும்படி செய்ய முடியும். இதேபோல் நோட்டிபிகேஷன்கள் சிறிது நேரத்திற்கு ஸ்னூஸ் செய்து கொள்ளும் வசதியும், அதன்பின் திரையில் தோன்றும் படி செய்ய முடியும்.  


ஆட்டோஃபில் ஃபிரேம்வொர்க் எனும் அம்சம் வாடிக்கையாளரை அடிக்கடி தொந்தரவு செய்யாமல் பார்த்து கொள்ளும். ஸ்மார்ட்போனில் அடிக்கடி பதிவு செய்யும் தகவல்களை (புதிய சேவை, கிரெடிட் டெபிட் கார்டு எண் உள்ளிட்டவை) நினைவில் வைத்துக் கொண்டு அடுத்த முறை பதிவு செய்யும் போது தகவல்களை பரிந்துரை செய்யும். வாடிக்கையாளர்கள் ஆட்டோஃபில் ஃபிரேம்வொர்க் சேவையை செட் செய்து கொண்டு அனைத்து செயலிகளிலும் பயன்படுத்த முடியும்.

ஆண்ட்ராய்டு டிவியில் வழங்கப்படும் பிக்சர்-இன்-பிக்சர் மோட் புதிய இயங்குதளத்திலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் கொண்டு மற்ற செயலிகளை பயன்படுத்திக் கொண்டே வீடியோக்களையும் பார்க்க முடியும். இதேபோன்ற அம்சம் முதலில் வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்ட்டது. இந்த செயலியில் வீடியோ கால்களின் போது வழங்கப்பட்டது. எனினும் இந்த அம்சம் பீட்டா பதிப்பில் மட்டும் வழங்கப்பட்டுள்ளது.   

புதிய இயங்குதளத்தின் மிகமுக்கிய அம்சங்களில் ஒன்றாக அடாப்டிவ் ஐகான் அம்சம் இருக்கிறது. இதை கொண்டு ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் புதிய யூசர் இன்டர்ஃபேசில் ஐகான் வடிவங்களை பிரத்தியேகமாக தேர்வு செய்ய முடியும். ஒவ்வொரு மாடலிலும் வெவ்வேறு வடிவம் கொண்ட ஐகான்களை செட் செய்ய முடியும். 

கேச்சி பட்ஜெட்:

ஸ்மார்ட்போனில் உள்ள ஒவ்வொரு செயலிக்கும் தனித்தனி கேச்சி பட்ஜெட் நிர்ணயம் செய்யப்படுகிறது. இவ்வாறு செய்யும் போது அதிக கேச்சி கொண்டிருக்கும் செயலிகளில் முதற்கட்டமாக கேச்சி மெமரி அழிக்கப்படும். 
திரையில் புதிய தகவல்களை தெரியப்படுத்த செயலிகளுக்கு எளிமையாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தரவுகளையும் புதியதாக அப்டேட் செய்யும், இதற்கென வாடிக்கையாளர்கள் எதையும் செய்ய வேண்டியதில்லை. ஸ்மார்ட்போனில் பயன்படுத்தாமல் பின்னணியில் இயங்கும் செயலிகள் தானாக இயங்க விடாமல் செய்து விடும். இதற்கென புதிய இயங்குதளத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

மீடியா பிளேபேக்:

ஆண்ட்ராய்டு ஓரியோவின் மீடியா பிளேயர் அதிகம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஸ்மார்ட்போனில் ஸ்ட்ரீமிங் செய்யும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் செயலிகள் பல்வேறு ஆடியோ மற்றும் வீடியோ டிராக்களை ஒரே சமயம் இயக்க முடியும். கேம் பிளே வீடியோக்களை இயக்கும் போது இந்த அம்சம் பயனுள்ளதாக இருக்கும்.  

கனெக்டிவிட்டி மற்றும் செக்யூரிட்டி:

இம்முறை வைபை அவேர் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் குறைந்த மின்திறன் கொண்டு வைபை ஹாட்ஸ்பாட் அல்லது இண்டர்நெட் இணைப்பு இன்றி சப்போர்ட் கொண்ட ஹார்டுவேர் ஒவ்வொன்றுடன் சாட் செய்யும். இத்துடன் புதிய ப்ளூடூத் லோ எனர்ஜி 5.0 சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. 

இத்துடன் ஸ்மார்ட் ஷேரிங் அம்சம் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் புகைப்படத்தின் தரத்தை ஆய்வு செய்து, அதனை சரியாக இயக்கும் செயலியை பரிந்துரை செய்யும். ஒவ்வொரு முறை புகைப்படம் எடுக்கப்படும் போதும் ஸ்மார்ட் ஷேரிங் அம்சம் துல்லியமாக அறிந்து கொண்டு சிறப்பான பரிந்துரைகளை வழங்கும். இதேபோல் ஸ்மார்ட் காப்பி அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் ஸ்மார்ட்போனில் காப்பி செய்யப்படும் வார்த்தைகளுக்கு ஏற்ற செயலியை பரிந்துரை செய்யும். 

ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தில் பல்வேறு ஆப்ஷன்கள் டெவலப்பர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் பாதுகாப்பு அம்சங்கள் ஆபத்து நிறைந்தவையாகவும் இருக்கிறது. கூகுள் சேஃப் பிரவுசிங் API மூலம் பிரவுசிங் மேலும் பாதுகாப்பான ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது.

அக்டோபர் 2016-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளத்தை மிஞ்சும் ஆண்ட்ராய்டு ஓரியோ முதற்கட்டமாக ஒன்பிளஸ் 5, ஒன்பிளஸ் 3 மற்றும் ஒன்பிளஸ் 3T ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. இதேபோல் நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 ஸ்மார்ட்போன்களிலும் ஆண்ட்ராய்டு ஓரியோ வழங்கப்படுவதை எச்எம்டி குளோபல் உறுதி செய்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget