தனுஷ், கஜோல், அமலா பால் மற்றும் பலர் நடித்த 'வேலையில்லா பட்டதாரி 2' படம் கடந்த 11ம் தேதி தமிழில் வெளிவந்தது. கடந்த வாரம் 18ம் தேதி ஹிந்தியில் வெளியானது. நேற்று தெலுங்கில் வெளியிட்டார்கள். தமிழ், ஹிந்தியில் இப்படத்திற்கு எப்படிப்பட்ட வரவேற்போ கிடைத்ததோ அதே வரவேற்புதான் தெலுங்கிலும் கிடைத்திருக்கிறது. வரவேற்பு என்றால் வெற்றிகரமான வரவேற்பு என்று நினைத்துவிட வேண்டாம். மோசனமான வரவேற்புதான்.
'வேலையில்லா பட்டதாரி' தெலுங்கில் 'ரகுவரன் பிடெக்' என்ற பெயரில் டப்பிங் ஆகி வெளியானது. படத்திற்கு நல்ல வசூலும் கிடைத்து லாபத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது. முதல் பாகத்தில் இருந்த ஒரு யதார்த்தம், நிறைவு இரண்டாம் பாகத்தில் இல்லை என படம் பார்த்த பலரும் கூறியிருந்தார்கள். படத்தில் கஜோல் நடித்திருந்தும் அது படத்திற்கு பலத்தைக் கொடுக்கவில்லை. தமிழில் மிகச் சுமாரான ஓடினாலும் கூட படம் நல்ல கலெக்ஷ்ன் என அடுத்த சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.
ஹிந்தியிலும் குறிப்பிடத்தக்க வசூலைப் பெறாத இந்தப் படம் 'விவேகம்' தெலுங்கு டப்பிங் வெளியான அடுத்த நாளான நேற்று வெளியானது. இருந்தாலும் 'விவேகம்' படத்திற்குக் கிடைக்கும் வசூல் கூட 'விஐபி' படத்திற்கு இல்லை என டோலிவுட்டிலிருந்து தெரிவிக்கிறார்கள்.
தனுஷ் நடித்த 'தங்கமகன், விஐபி 2' ஆகிய இரண்டு படங்களுமே தோல்வியைத்தான் தழுவியுள்ளன. அடுத்து வெளிவர இருக்கும் 'வட சென்னை' படம்தான் தனுஷை மேலும் வழுக்காமல் காப்பாற்ற வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment