Ads (728x90)

தென் ஆப்ரிக்காவில் போலீசாரிடம் சென்று ஒருவர் மனிதக்கறி உண்டு அலுத்துப் போய்விட்டதாக கூறியுள்ளார். இதனால், அவருடன் இருந்த நண்பர்களும் போலீசாரிடம் சிக்கிக் கொண்டார்கள்.
 
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அந்த நபர் வசம் இருந்த மனித உடல் பாகங்களான கை மற்றும் காலை காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். அந்த நபரை அழைத்துக் கொண்டு க்வாசுலு-நடால் பகுதியில் உள்ள அவர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்ற காவல் துறையினர், அங்கு மேலும் பல மனித உடல் பாகங்களை கண்டறிந்தனர்.
 
இது தொடர்பாக பாரம்பரிய மருத்துவர்கள் இருவர் உள்ளிட்ட நால்வரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கு குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 
 
கைப்பற்றப்பட்டுள்ள மனித உடல் பாகங்களை ஆய்வு செய்ய தடயவியல் குழு ஒன்று வரவழைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பாகங்கள் ஒரு மனித உடலைச் சேர்ந்ததா அல்லது பல மனித உடல்களைச் சேர்ந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

Post a Comment

Recent News

Recent Posts Widget