Ads (728x90)

மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காரணமான நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் பதுங்கியுள்ளார். இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான தாவூத் இப்ராஹிம் பாக்.கில் பதுங்கியிருப்பதாக பல முறை ஆதாரத்துடன் கூறியும், பாகிஸ்தான் வழக்கம் போல், தங்கள் நாட்டில் இல்லை என மறுத்து வருகிறது.

இந்நிலையில் பிரிட்டன் நிதி அமைச்சகம் , அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நிதி பெறுவதற்கு தடை விதிக்கப்பட்டவர்கள், அமைப்புகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் தாவூத் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அந்தபட்டியலில் தாவூத் பாகிஸ்தானில் 21 பெயர்களிலும், 3 முகவரிகளிலும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அத்துடன் பெயர் பட்டியல்களையும், முகவரிகளையும் வெளியிட்டுள்ளது. எனினும் இந்தியாவில் தாவூத் முகவரி மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டம் கெஹர் என ஒரு முகவரி மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget