ஓணம் பூஜைகளுக்காக, சபரிமலை கோவில் நடை, செப்., 2 மாலை, 5:00 மணிக்கு திறக்கிறது. 3ம் தேதி முதல், நான்கு நாட்கள் ஓண விருந்து நடக்கிறது. செப்., 2ல், மேல்சாந்தி உண்ணி கிருஷ்ணன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். அன்று வேறு பூஜைகள் நடக்காது. செப்., 3 முதல் நெய் அபி-ஷேகம், வழக்கமான பூஜைகள் நடக்கும்.களபாபிஷேகம், சகஸ்ர கலச பூஜை ஆகியவை, ஓண கால பூஜையின் முக்கிய அம்சங்கள். செப்., 3 முதல், 6ம் தேதி வரை, மதியத்தில் களப பூஜை, செப்., 4 முதல், 6 வரை சகஸ்ர கலசாபிஷேகம் நடக்கும். செப்., 6 வரை தினமும் இரவு, 7:00 மணிக்கு படிபூஜை நடக்கிறது.
செப்., 3ல், மேல்சாந்தி உண்ணி கிருஷ்ணன் நம்பூதிரி சார்பில், 19 வகை கூட்டு, பாயசத்துடன், 2,500 பக்தர்களுக்கு உத்திராடம் விருந்து வழங்கப்படும். டாக்டர் மணிகண்டதாஸ் என்ற பக்தர் சார்பில், 28 வகை கூட்டு, பாயசத்துடன், 7,000 பேருக்கு திருவோண விருந்து வழங்கப்படும். இவர், 67 ஆண்டுகளாக விருந்து கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.செப்., 5, 6ல், தேவசம் போர்டு ஊழியர்கள் சார்பில், ஓண விருந்து நடக்கும். 6ம் தேதி இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment