இரண்டு பெண் துறவியரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள, 'தேரா சச்சா சவுதா' அமைப்பின் தலைவர், குர்மீத் ராம் ரஹீமுக்கு(50), 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரோதக்கில் உள்ள சுனாரியா சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்ததாவது: தவறான பாதைக்கு சென்ற ஒரு சாமியார் கைதானதன் மூலம், மற்ற துறவிகள், மதத் தலைவர்களும் அதே போன்றவர்களே என நினைக்கக் கூடாது. நாட்டில் எத்தனையோ உண்மையான ஆன்மிக தலைவர்கள், துறவிகள் வாழ்கின்றனர்; சாமியார்கள், தங்கள் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Post a Comment