அமெரிக்காவில் நடக்கும் நியூஹெவன் ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் இந்தியாவின் சானியா, ருமேனியாவின் மோனிகா ஜோடி வீழ்ந்தது.
அமெரிக்காவில் உள்ள நியூஹெவன் பகுதியில் பெண்களுக்கான சர்வதேச டென்னிஸ் தொடர் நடக்கிறது.
இதன் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சானியா, ருமேனியாவின் மோனிகா ஜோடி, அமெரிக்காவின் நிக்கோலே, பிரிட்டனின் அன்னா ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 5–7 என இழந்த சானியா ஜோடி, அடுத்த செட்டையும் 6–7 என போராடி பறிகொடுத்தது. ஒரு மணி நேரம் 30 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில் சானியா, மோனிகா ஜோடி 5–7, 6–7 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment