Ads (728x90)

 இத்தாலியில், சுற்றுலா தலமான, இஸ்சியா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், இரு பெண்கள் இறந்தனர்; 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஐரோப்பிய நாடான இத்தாலியில் உள்ளது, இஸ்சியா தீவு. விடுமுறை நாட்களில், இந்த தீவில் சுற்றுலா பயணியர் அதிகம் குவிவதால், இதை, 'விடுமுறை தீவு' என, இத்தாலி மக்கள் அழைக்கின்றனர். இஸ்சியா தீவில், நேற்று முன்தினம் இரவு, நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவில், 4 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால், காஸாமிசியலா நகரில், ஒரு கட்டடம் இடிந்து விழுந்தது. இதில், ஒரு பெண் இறந்தார். மற்றொரு இடத்தில், தேவாலயம் இடிந்து விழுந்ததில், ஒரு பெண் இறந்தார். மேலும், 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாக, இத்தாலி அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

நிலநடுக்கத்தை தொடர்ந்து, பலமுறை நில அதிர்வுகள் ஏற்பட்டதால், மக்கள் பீதியடைந்து உள்ளனர். இத்தாலியில், 2016 ஆக., 26ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், 300க்கும் மேற்பட்டோர் இறந்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget