இந்நிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவும், இளவரசியும் சாதாரண உடையில் வலம் வரும் புதிய வீடியோ ஆதாரத்தை சிறைத்துறை முன்னாள் டிஐஜி ரூபா, லஞ்ச ஒழிப்பு துறையிடம் ஒப்படைத்துள்ளார்.
ரூபா ஒப்படைத்துள்ள புதிய வீடியோ ஆதாரத்தில், சசிகலாவும், இளவரசியும் தங்களின் சொந்த உடையில், பரப்பன அக்ரஹார சிறையின் பிரதான நுழைவாயில் வழியாக சிறைக்குள் வருவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
கையில் ஷாப்பிங் பையுடன், சுடிதார் அணிந்து சசிகலா வரும் காட்சி இடம்பெற்றுள்ளது.சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளதற்கான ஆதாரம் என கூறி ரூபா, இந்த வீடியோவை அளித்துள்ளார்.
மேலும் பெண்கள் சிறைக்குள் ஆண் காவலர்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் பிரதான நுழைவாயிலிலேயே காவலுக்கு நிறுத்தப்படுவார்கள். இந்த வீடியோவில் சசிகலா கடந்து செல்லும் பொழுது, ஆண் கைதி ஒருவர் சிறை உடையில் இருப்பதும் பதிவாகி உள்ளது.
Post a Comment