இலங்கை கிரிக்கெட் அணி தொடர்ந்து மோசமான தோல்விகளை சந்தித்து வருவதால் பொறுமையிழந்த ரசிகர்கள் நேற்றுமுன்தினம் நடைபெற்ற போட்டியின் முடிவில் தங்கள் எதிர்ப்பை காட்டிவிட்டனர். ஆத்திரமடைந்த ரசிகர்கள் இலங்கை வீரர்கள் சென்ற பஸ்ஸையும் மறித்து 'ஹூ' என கோஷமிட்டு தங்கள் எதிர்ப்பை காட்டியுள்ளனர்.
இதேவேளை இலங்கை வீரர்களுக்கு போட்டியின் இடைவேளையின் போது வழங்கப்படும் இனிப்பு பிஸ்கட்டை தடை செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய – இலங்கை அணிகள் மோதிய முதலாவது ஒருநாள் போட்டி தம்புள்ளையில் நேற்று முன்தினம் பகலிரவு போட்டியாக நடைபெற்றது.
இதில் இந்திய அணி 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
ஏற்கனவே, டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணி மோசமான தோல்வி அடைந்ததால் கோபத்தில் இருந்த ரசிகர்கள், ஒருநாள் போட்டியிலும் இலங்கை அணி மண்ணைக் கௌவியதால், ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றனர்.
போட்டி முடிந்ததும் இலங்கை அணி வீரர்கள் சென்ற சொகுசு பேருந்தை, ரசிகர்கள் சுமார் 50 இற்கும் மேற்பட்டோர் மறித்து நின்றனர்.
இதையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து இலங்கை அணி வீரர்களை பத்திரமாக அழைத்துச்சென்றனர்.
இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதேவேளை இலங்கை அணி வீரர்களின் உடற்தகுதியை கருத்தில் கொண்டு வீரர்கள் அறையில் இனிப்பு பிஸ்கட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மைதானத்தில் இருக்கும் வீரர்கள் அறைக்கு அடிக்கடி தேநீர், கோப்பி, குளிர்பானத்துடன் பிஸ்கட் சேர்த்து வழங்கப்படும்.
தற்போது இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வீரர்களின் உடற்தகுதி மீது அதிக அக்கறை எடுத்து வருவதால் இலங்கை வீரர்கள் அறையில் இனிப்பு பிஸ்கட்டிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இனிப்பு பிஸ்கட்டில் புரோட்டீன் சத்து அதிகம் இருப்பதால் இந்த தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Post a Comment