Ads (728x90)

2022ஆ-ம் ஆண்டு, பிபா உலகக் கிண்ணக் கால்­பந்துத் தொடர் கட்­டாரில் நடை­பெ­ற­வுள்­ளது. 
தீவி­ர­வா­தத்­துக்கு கட்டார் ஆத­ரவு தெரி­விப்­ப­தாகக் கூறி ஐக்­கிய அரபு அமீ­ரகம், சவூதி அரே­பியா உள்­ளிட்ட ஐந்து நாடுகள் கட்டார் உட­னான உறவை முறித்­துக்­கொண்­டுள்­ளன.
இந்தப் பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்­கான பேச்­சு­வார்த்தை நடை­பெற்­று­வ­ரு­கி­றது. 
இது ஒருபுற­மி­ருக்க, எதிர்­வரும் 2022ஆ-ம் ஆண்டு நடை­பெ­ற­வி­ருக்கும் பிபா உலகக் கிண்ணக் கால்­பந்துத் தொட­ருக்­கான முன்­னேற்­பா­டு­களை கட்டார் நாடு தொடங்­கி­யுள்­ளது. 
அதன் ஒரு­ப­கு­தி­யாக, அரே­பியத் தொப்பி வடி­வி­லான கால்­பந்து மைதா­னத்தை அமைக்க இருப்­ப­தாக கட்டார் அறி­வித்­துள்­ளது.
தலை­நகர் டோஹாவில் அமைக்­கப்­ப­ட­வி­ருக்கும் அல் – துமாமா மைதானம், பாரம்­பரிய ’காஃபியா’ எனப்­படும் அரே­பியத் தொப்பி வடிவில் அமைய இருக்­கி­றது. 
சுமார் 40,000 பேர் வரை அம­ரக்­கூ­டிய வகையில் உரு­வாக இருக்கும் இந்த மைதானம், கட்­டாரைச் சேர்ந்த கட்­டடக் கலைஞர் ஒரு­வரால் வடி­வமைக்கப்­பட்­டுள்­ளது. 
இஸ்­லா­மி­யர்­களை ஒன்­றி­ணைக்கும் சின்­ன­மாக இந்த மைதா­னத்தை அரே­பியத் தொப்பி வடிவில் அமைக்க இருப்பதாக போட்டி ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் ஹஸன் அல் தவாடி தெரிவித்துள்ளார். 

Post a Comment

Recent News

Recent Posts Widget