வரும் ஆக-31ஆம் தேதி மோகன்லால் நடித்துள்ள 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படம் திரைக்கு வர இருக்கிறது. மலையாள சினிமாவின் ஜாம்பவான் இயக்குனர்களில் ஒருவரான லால் ஜோஸும் மோகன்லாலும் முதன்முறையாக இந்தப்படத்தில் கைகோர்த்திருப்பதால் இந்தப்படத்திற்கு இரண்டு மடங்கு எதிர்பார்ப்பு எழுந்திருப்பது உண்மை. இந்நிலையில் இந்தப்படம் மிகப்பெரிய வெற்றிபெற வேண்டும் என கேரளவில் உள்ள சூர்யா ரசிகர் மன்றத்தினர் தங்களது வாழ்த்தை வித்தியாசமான முறையில் தெரிவித்துள்ளனர்.
சூர்யா தற்போது நடித்து வரும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் பர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளியானது இல்லையா..? அதில் இரண்டு விதமான கெட்டப்புக்களில் இருக்கும் சூர்யாவின் படங்களை தலைகீழாக வைத்து புதுமையான முறையில் போஸ்டரை டிசைன் பண்ணியிருந்தார்கள். மோகன்லாலும் இந்த 'வெளிப்பாடிண்டே புஸ்தகம் படத்தில் இரண்டு விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார்.
அதனால் சூர்யா பட போஸ்டர் பாணியில் மோகன்லாலின் இரண்டு கெட்டப்புகளையும் இணைத்து புதிய போஸ்டர் ஒன்றை உருவாக்கி அதில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் கேரள சூர்யா ரசிகர்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment