ராஜமவுலி இயக்கத்தில் நடித்த பாகுபலி-2 படத்தை அடுத்து அனுஷ்கா நடித்துள்ள படம் பாக்மதி. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகியுள்ள இந்த படம் திரில்லர் கதையில் உருவாகியிருக்கிறது.
ஜெயராம், உன்னி முகுந்தன் போன்ற மலையாள நடிகர்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக இறுதிகட்ட பணிகள் நடைபெற்றுவரும் இப்படத்தை அடுத்து ஆண்டு சங்கராந்திக்குத்தான் வெளியாக திட்டமிட்டிருந்தனர். ஆனால் இப்போது முன்கூட்டியே பாக்மதி திரைக்கு வருவதாக சொல்கிறார்கள்.
காரணம், 2018 சங்கராந்திக்கு தெலுங்கில் பாலகிருஷ்ணா, மகேஷ்பாபு போன்ற நடிகர்களின் படங்கள் வெளியாகிறதாம். அதனால் மெகா நடிகர்களுடன் மோத வேண்டாம் என்பதற்காக வருகிற டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் தினத்தில் அனுஷ்காவின் பாக்மதியை வெளியிடுகிறார்களாம்.
மேலும், அன்றைய தினத்தில் பாக்மதி படத்துடன் நானியின் எம்சிஏ, விக்ரம்குமார் இயக்கத்தில் அகில் நடித்துள்ள இரண்டாவது படங்களும் வெளியாகிறதாம்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment