முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தனக்கு வழங்கப்பட்டிருந்த வாகனத்தை அமைச்சில் ஒப்படைத்து அமைச்சிலிருந்து வெளியேறியுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தின் கோரிக்கைக்கு அமைய அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன அமைச்சர் விஜேதாச ராஜபக்சவை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்தார்.
அமைச்சர் விஜேதாச ராஜபக்சவை நீதி மற்றும் புத்தசாசன அமைச்சிலிருந்து பதவி நீக்கம் செய்யும் கடிதம் அரச தலைவர் செயலகத்தால் அவருக்கு அனுப்பப்பட்டது.
இதேவேளை, தான் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து வெளியேற மாட்டேன் என விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Post a Comment