ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சைக்கு வரும் மதகுருமார்களுக்கு கட்டணம் அறவிடவேண்டாமென சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அந்த வைத்தியசாலை நிர்வாகத்துக்குப் பணித்துள்ளார்.
சகல மதங்களையும் சேர்ந்த மதகுருமார்களுக்கு வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவிலும் நோயாளர் விடுதிகளிலும் எந்தவிதக் கட்டணத்தையும் அறவிட வேண்டாமென சுகாதார அமைச்சர் உத்தரவிட்டிருப்பதாக அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.

Post a Comment