கமல்ஹாசனின் அண்ணன் மகள் அனுஹாசன். இந்திரா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு பல படங்களில் நடித்தாலும் சினிமாவில் பெரிய இடத்தை அவரால் பிடிக்க முடியவில்லை. இன்றைக்கு டிடி நடத்தும் காபி வித் டிடிக்கு முன்பு அந்த நிகழ்ச்சியை காபி வித்த அனு என்ற நிகழ்ச்சியாக நடத்தியவர் அனுஹாசன். அன்புள்ள சினேகிதியே, ரேகா ஐ.பி.எஸ், உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தார், அனு அளவும் பயமில்லை, என் சமையல் அறையில் உள்ளிட்ட பல ரியாலிட்டி ஷோக்களையும் நடத்தினார்.அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு லண்டனில் செட்டிலனார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது வல்லதேசம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வெளிநாட்டில் நடப்பது மாதிரியான கதை அம்சம் கொண்ட படம். இதில் அனுஹாசன் ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார். சண்டை காட்சிகளிலும் துணிச்சலாக நடித்துள்ளார்.
வல்லதேசம் வருகிற 15ந் தேதி வெளிவருகிறது. அதையொட்டியும் தொடர்ந்து சினிமாவில் நடிக்கும் எண்ணத்திலும் சென்னைக்கு திரும்பி விட்டார் அனு ஹாசன். இனி நிரந்தரமாக இங்கேயே தங்கிவிட முடிவெடுத்திருக்கிறாராம். சினிமாவில் நடிக்க தொடர்ந்து கதை கேட்டு வருகிறார். தொடர்ந்து டி.வி நிகழ்ச்சி நடத்தவும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. விஜய் டி.வி மற்றும் ஜீ தமிழ் சேனல்கள் அனுவுடன் பேச்சு நடத்தியுள்ளது. விரைவில் சின்னத்திரையிலும் வலம் வர இருக்கிறார் அனுஹாசன்.
Post a Comment