Ads (728x90)

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் பெண் வேடமிட்டு நடித்திருக்கிறார்கள். அதில் கமல், பிரஷாந்த் உள்ளிட்ட சிலருக்கு தான் அந்த வேடம் பக்காவாக பொருந்தியது. தற்போது அப்படியொரு ரோல், நடிகர் விஜய் சேதுபதிக்கு பக்காவாக அமைந்திருக்கிறது.

இந்தாண்டும் கைநிறைய படங்களுடன் பிஸி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதி, அடுத்தப்படியாக "ஆரண்ய காண்டம்" புகழ் இயக்குநர் தியாகராஜா குமாரராஜா இயக்கும் "அநீதி கதைகள்" என்ற படத்தில் நடிக்கிறார். இதில் விஜய் சேதுபதியுடன் சமந்தா, பகத்பாசில் ஆகியோரும் முக்கிய ரோலில் நடிக்கின்றனர்.

படத்தில் விஜய் சேதுபதி, திருநங்கையாக நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், இப்போது விஜய் சேதுபதி பெண் வேடத்தில் இருக்கும் போட்டோ ஒன்று சமூகவலைதளங்களில் வைராகி வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி, ஷில்பா என்ற பெண் வேடத்தில் நடிக்கிறாராம். அவர் பெண் வேடத்தில் நடிக்கிறாரா... இல்லை திருநங்கை வேடத்தில் நடிக்கிறாரா... என்பது இன்னும் உறுதியாகவில்லை.

Post a Comment

Recent News

Recent Posts Widget