சமீபத்தில் வெளியாகி பரபரப்புடன் ஓடிக் கொண்டிருக்கும் தெலுங்குப் படம் அர்ஜுன் ரெட்டி. இந்த ஒரே படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு வந்திருக்கிறார் ஷாலினி பாண்டே. தெலுங்கு தேச மக்கள் ஷாலினியை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ், கன்னட மொழிகளிலும் நடிக்க படம் குவிந்து வருகிறது.இந்த நிலையில் ஷாலினி பாண்டே, ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஒரு செல்போன் கடையை திறந்து வைக்கச் சென்றுள்ளார். ஷாலின் வருவதை அறிந்து அங்கு ஆயிரக் கணக்கான ரசிகர்கள் கூடியிருந்தார்கள். ஏற்கெனவே சற்று காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த ஷாலினி தன்னை பார்க்க வந்த கூட்டத்தை பார்த்து மயங்கி விழுந்திருக்கிறார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த செல்போன் கடை உரிமையாளர்கள். அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறிது நேரம் மருத்துவமனையிலேய ஓய்வெடுத்த ஷாலினி. அதன் பிறகு திறப்பு விழாவில் கலந்து கொண்டு விட்டு ஐதராபாத் திரும்பினார்.
Post a Comment