Ads (728x90)

யாரும் எதிர்பாராத விதமாக மணிரத்தினம் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்கிறார் சிம்பு. விஜய் சேதுபதி இன்னொரு ஹீரோ, ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா ஆகியோரும் நடிக்கிறார்கள். சிம்பு மணிரத்னம் படத்தில் நடிப்பது குறித்து டி.ராஜேந்தர் கூறியதாவது:

மணிரத்னத்தின் அண்ணன் ஜி.வியும் நானும் நெருங்கிய நண்பர்கள்.. மணிரத்னமும் எனது நண்பர்தான். செப்-2ஆம் தேதி குருபெயர்ச்சி தினத்தன்று மணிரத்னம் தன்னை வந்து பார்க்க சொன்னதாக சிம்பு என்னிடம் சொன்னார். ரஜினி, கமல் என பெரிய நடிகர்களை வைத்து இயக்கியவர், ஆஸ்கர் விருது வாங்கி தமிழகத்திற்கு பெருமை சேர்த்த ஏ.ஆர்.ரஹ்மானை அறிமுகப்படுத்தியவர்.  அந்தவகையில் இயக்குனர் மணிரத்னமும் குரு ஸ்தானத்தில் இருப்பவர் தான். உனக்கு சரியாக பட்டால் போய் பார்த்துவிட்டு வா. என அனுப்பினேன்.

சிம்புவும், நயன்தாராவும் நடித்து தமிழில் வெளிவந்த இது நம்ம ஆளு படத்தை சரஸூடு என்ற பெயரில் தெலுங்கில் நானே வெளியிடுகிறேன். தமிழ்ப்படத்தை அப்படியே டப்பிங் செய்து வெளியிடுகிறேன் என நினைத்து விடவேண்டாம். இந்தப்படம் உருவாகும்போதே தமிழ், தெலுங்கு என இருமொழிப்படமாக தயாராகி வந்தது..

இங்கே தமிழில் சூரி நடித்த 40 நிமிட காட்சிகள், தெலுங்கில் சத்யம் ராஜேஷ் என்கிற காமெடி நடிகரை வைத்து படமாக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, தெலுங்கானாவில் மட்டுமல்லாமல் கர்நாடகாவிலும், தமிழகத்தில் உள்ள சில முக்கிய தியேட்டர்களிலும் தெலுங்கிலேயே ரிலீஸாகிறது என்றார் டி.ராஜேந்தர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget