
தற்போது தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள யாகம் படத்திற்கு அவர் இசையமைத்துள்ளார். இதுபற்றி இசையமைப்பாளர் கோட்டி கூறுகையில், நான் இசையமைத்த அருந்ததி படத்தின் பாடல்கள் தெலுங்கை விட தமிழில்தான் அதிக வரவேற்பு பெற்றது. அந்த வகையில், இப்போது யாகம் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்களை சந்திக்க வருகிறேன். அந்த படத்தைப்போலவே இந்த படத்திற்கும் நல்ல வரவேற்பு கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
மேலும், நான் தெலுங்கு படங்களுக்கு இசையமைத்து வந்தபோது அந்த படங்களின் இசைப்பதிவு சென்னையில்தான் நடைபெறும். அப்போது ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ், தேவிஸ்ரீ பிரசாத், தமன் உள்பட இப்போது இசையமைப்பாளர்களாக இருக்கும் பலர் எனது இசையில் இசைக்கருவிகள் வாசித்துள்ளனர். அவர்களெல்லாம் இப்போது பெரிய இசையமைப்பாளர்களாக இருப்பது சந்தோசமாக உள்ளது என்று கூறும் கோட்டி, யாகன் படத்திற்கு பாடல்கள் மட்டுமின்றி பின்னணி இசையிலும் அதிக கவனம் செலுத்தியிருக்கிறேன். அதனால் இந்த படம் எனக்கு இன்னொரு அருந்ததியாக இருக்கும் என்று நம்புகிறேன் என்கிறார்.
Post a Comment