Ads (728x90)

மலையாளத்தில் மோகன்லால் நடித்து வெளியான படம் வெளிப்பாடிண்டே புஸ்தகம். இந்த படத்தில் ஜிமிக்கி கம்மல் என்று தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ளது. கடந்த ஓணம் பண்டிகையையொட்டி இந்த பாடலுக்கு இந்தியன் ஸ்கூல் ஆப் காமர்ஸ் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நடனமாடி அதை வீடியோவாக இணையதளத்தில் வெளியிட்டனர். அந்த வீடியோ உலக அளவில் வைரலாகி விட்டது.

அதோடு, அந்த வீடியோவில் முன்வரிசையில் நடனமாடிய ஷெரில் என்ற பெண் பெரிய அளவில் பிரபலமாகி விட்டார். ஆசிரியையாக பணியாற்றும் அவரை சில மீடியாக்கள் தேடிச்சென்று பேட்டி எடுத்துள்ளனர். அப்போது, நான் விஜய், அஜித்தின் ரசிகை என்று அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், தற்போது தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தை இயக்கி வரும் கே.எஸ்.ரவிக்குமார், அடுத்தபடியாக விஜய்யை வைத்து ஒரு படம் இயக்கப்போவதாகவும், அந்த படத்தில் நாயகியாக நடிக்க ஜிமிக்கி கம்மல் ஷெரிலை அணுகியிருப்பதாக ஒரு செய்தி இணைய தளங்களில் வைரலாகியிருக்கிறது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இதுகுறித்து சம்பந்தபட்டவர்களிடமிருந்து எந்தவித அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகவில்லை.

Post a Comment

Recent News

Recent Posts Widget