தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா கிளிநொச்சிக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்டார். கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் இலவச கணனிக் கற்கைநெறி இடம்பெற்றது.குறித்த கற்கைநெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்றுப் பிற்பகல் 2 மணியளவில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் த.குருகுல ராஜா தலைமையில் இடம்பெற்றது.
அதில் விருந்தினராக பாரதிராஜா கலந்துகொண்டார். அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சோ. சேனாதிராசாவும் கலந்து கொண்டிருந்தார். அவர்கள் உரையாற்றியிருந்தனர்.
மாணவர்களின் கலைநிகழ்வுகளைத் தொடர்ந்து பயிற்சியை முழுமை செய்த 130 மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சான்றிதழ்களை பாரதிராஜா வழங்கினார். இந்த நிகழ்வில் மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment