Ads (728x90)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் லலித் வீரதுங்க, சில் துணி விவகாரத்தில் நீதிமன்றத்தால் குற்றவாளியாகக் காணப்பட்ட நிலையில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலை தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் அனுஷ பெல்பிட  ஆகிய இருவரினதும் குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து கொழும்பு உச்ச நீதிமன்றம் இருவருக்கும் மூன்று வருட சிறை தண்டனையை வழங்கியுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் 600 மில்லியன் பணத்தை சில் துணி கொள்வனவிற்காக பயன்படுத்திய மோசடி வழக்கு கொழும்பு உச்ச நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த பண மோசடி வழக்கு விசாரணையில் சாட்சியங்களும் ஆதாரங்களும் லலித் வீரதுங்கவும் அனுஷ பெல்பிடவும் குற்றவாளிகள் என உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்தே இருவருக்கும் தலா மூன்று வருடங்கள் கடூழிய சிறை தண்டனையுடன் தலா 20 இலட்சம் ரூபா அபாரதமும் விதித்துள்ளது.

மேலும் இருவரும் தலா 50 மில்லியன் ரூபாவை அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளருக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டப்பணத்தை திரட்டும் நோக்கில் கூட்டுஎதிரணியைச் சேரந்த பௌத்த துறவிகளால் நாட்டில் பணம் திரட்டும் நடிவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Post a Comment

Recent News

Recent Posts Widget