Ads (728x90)

7.09.2017 முதல் 17.10.2017வரை:-

நிறை குறைகளை அலசி ஆராய்ந்து மற்றவர்களை துல்லியமாக கணிக்கும் நீங்கள் பிறரின் உணர்வுக்கு மதிப்பு கொடுப்பவர்கள். உங்கள் ராசிக்கு 2ம் வீட்டிலேயே கடந்த ஒரு மாதமாக அமர்ந்து கொண்டு ஓரளவு பணவரவையும், பேச்சால் சின்ன சின்ன பிரச்னைகளையும் ஏற்படுத்தி வந்த சூரியன் ராசிக்கு 3ம் வீட்டில் வந்து அமர்ந்ததால் தடைப்பட்ட காரியங்கள் முடியும். கண் கோளாறு, பல் வலியிலிருந்து விடுபடுவீர்கள். சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அரசாங்கத்தால் கௌரவம் உண்டு. சிலர் அயல்நாடு சென்று வருவீர்கள். வழக்குகள் எதிர்பார்த்ததைவிட நல்ல விதத்தில் முடியும். மற்றவர்களை நம்பி ஏமாந்து போன விஷயங்கள் இந்த மாதத்தில் முடியும்.

ஆனால் ராசிக்குள் ராகுவும், 7ல் கேதுவும் தொடர்வதால் எதுவாக இருந்தாலும் நீங்களே நேரில் சென்று எல்லா வேலைகளை செய்து முடிப்பது நல்லது. இடைத்தரகர்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். சில நேரங்களில் கோபப்படுவீர்கள். சிலரின் சுயரூபத்தை அறிந்து கொண்டு வருத்தப்படுவீர்கள். சிலர் ஏன் இப்படி எல்லாம் நன்றி கெட்டத்தனமாக நடந்து கொள்கிறார்கள் என்று வேதனைப்படுவீர்கள். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் பழைய இனிமையான அனுபவங்கள் நினைவுக்கு வரும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் சமயோஜித புத்தியுடன் பேசுவீர்கள். குரு 4ல் அமர்ந்திருப்பதால் தாயாருக்கு முதுகுத் தண்டில் வலி, அசதி, சோர்வு வந்து நீங்கும். சிலர் வீடு மாறவேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும்.

வீட்டை விரிவுபடுத்துவது, புதுப்பிப்பது போன்ற முயற்சிகள் தாமதமாகி முடியும். செவ்வாய் சாதகமாக இல்லாததால் வீரியத்தை குறைத்துக் கொண்டு காரியத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடிய வாய்ப்பிருக்கிறது. அரசியல்வாதிகளே! கட்சி மேல்மட்டத்தில் மதிக்கப்படுவீர்கள். கன்னிப் பெண்களே! பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மாணவமாணவிகளே! விளையாடும் போது கவனம் தேவை. பயணங்களின் போது பேருந்தில் படிக்கட்டில் நின்று பயணிக்க வேண்டாம். பொது அறிவுத் திறன் வளரும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். வேலையாட்களை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது.

ரசாயன வகைகள், கட்டிட உதிரி பாகங்கள், பருப்பு வகைகளால் ஆதாயமடைவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் செய்த தவறுகளுக்கெல்லாம் நாம் பலிகடா ஆகிவிட்டோமே என்றெல்லாம் வருத்தப்படுவீர்கள். முக்கிய ஆவணங்களை கவனமாகக் கையாளுங்கள்.  சக ஊழியர்களால் அலைக்கழிக்கப்படுவீர்கள். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் நட்பால் ஆதாயமடைவீர்கள். விவசாயிகளே! மகசூல் மந்தமாக இருக்கும். தண்ணீர் பிரச்னையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது என்பதுபோலதான் இப்போதைய நிலை இருக்கும். நிதானத்தால் நெருக்கடிகளை நீந்திக் கடக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்:

செப்டம்பர் 18, 19, 20, 22, 23, 28, 29, 30 மற்றும் அக்டோபர் 1, 7, 8, 10, 16, 17.

சந்திராஷ்டம தினங்கள்:

அக்டோபர் 2ம் தேதி காலை 8.13 மணி முதல் 3, 4ம் தேதி பிற்பகல் 3.55 மணி வரை யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

பரிகாரம்:

ராமர்  ஆலயத்திற்குச் சென்று தரிசித்து வாருங்கள். மரக்கன்று நட்டு பராமரியுங்கள்.

Post a Comment

Recent News

Recent Posts Widget