Ads (728x90)

17.09.2017 முதல் 17.10.2017வரை:-

அரைக்காசுக்கு போன மானம் ஒரு கோடி கொடுத்தாலும் திரும்ப வராது என்பதை அறிந்த நீங்கள் தன்மானச் சிங்கங்கள். இந்த மாதம் முழுக்க சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பிரச்னைகளை எப்படி தீர்க்கலாம் என்று யோசிப்பீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் பழைய சிக்கல்களை தீர்ப்பீர்கள். வாகனத்தை மாற்றுவது, சீர் செய்வது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். புதிதாக ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டு. கேது 6ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் முக்கியமான முடிவுகளெல்லாம் தன்னிச்சையாக எடுப்பீர்கள். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீட்டுமனை வாங்குவீர்கள். தள்ளிப்போன வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.

வேற்றுமதம், மொழியினரால் அதிரடி மாற்றம் உண்டாகும். பங்குச் சந்தை மூலமாக பணம் வரும். உங்களின் பூர்வ புண்யாதிபதியான குருபகவான் ராசிக்கு 3ம் வீட்டில் நிற்பதால் முன்கோபத்தைக் குறையுங்கள். தன்னம்பிக்கையில்லாமல் போகும். பெயரும், புகழும் கெட்டுவிடுமோ என்ற ஒரு பயம் ஏற்படும். எப்போது பார்த்தாலும் மனதில் சின்னச் சின்ன சலனம் இருந்து கொண்டேயிருக்கும். புதன் சாதகமான நட்சத்திரங்களில் சென்று கொண்டிருப்பதால் செலவுக்கு பணம் வரும். கொடுக்கல், வாங்கலில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். உறவினர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். நட்பு வட்டம் விரியும். உங்கள் ராசிநாதன் சூரியன் ராசியை விட்டு விலகி 2ல் அமர்ந்ததால் கண் எரிச்சல், பார்வைக் கோளாறு, பல் வலி, பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும்.

அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால் என்ன வாழ்க்கை இது? செக்கு மாட்டு வாழ்க்கை மாதிரி என்றெல்லாம் சின்னதாக ஒரு வெறுப்பு, சலிப்பு வந்து போகும். தாயாரிடம் எதையும் மறைக்க வேண்டாம். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். அரசியல்வாதிகளே! வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். கன்னிப் பெண்களே! சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். புதிதாக லேப்டாப், மொபைல் போன் வாங்குவீர்கள். மாணவமாணவிகளே! உங்களின் தனித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க வேண்டுமென்று நினைத்திருந்த இடத்திற்கு சென்று வருவீர்கள்.

வியாபாரத்தில் வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து புது முடிவு எடுப்பீர்கள். அனுபவமிக்க வேலையாட்கள் அமைவார்கள். வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். இரும்பு, ஸ்பெகுலேஷன், கடல் உணவு வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்களிடம் எச்சரிக்கையாக செயல்படப்பாருங்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் அதிகாரியின் ஆறுதல் வார்த்தையால் நிம்மதி கிட்டும். சக ஊழியர்களால் மறைமுக எதிர்ப்புகளும், தொந்தரவுகளும் தொடர்ந்துக் கொண்டேதான் இருக்கும். கலைத்துறையினரே! உங்களின் படைப்புகளுக்கு பட்டிதொட்டியெங்கும் பாராட்டுக் கிடைக்கும். விவசாயிகளே! மரப்பயிர்களால் வருமானம் பெருகும். இயற்கை உரத்தை மறந்து விடாதீர்கள். மனப்போராட்டம் நீங்கி மகிழ்ச்சி பெருகும் மாதமிது.

ராசியான தேதிகள்:

செப்டம்பர் 22, 23, 24, 30 மற்றும் அக்டோபர் 1, 2, 3, 9, 10, 11, 12.

சந்திராஷ்டம தினங்கள் :

அக்டோபர் 4ம் தேதி பிற்பகல் 3.55 மணி முதல் 5, 6ம் தேதி இரவு 9.17 மணி வரை புதிய தொழில் எதையும் தொடங்க வேண்டாம்.

பரிகாரம்:

அம்பாளை  தரிசித்து வாருங்கள். கோயில் உழவாரப் பணியை மேற்கொள்ளுங்கள்

Post a Comment

Recent News

Recent Posts Widget