தற்காலிக மற்றும் உடன்படிக்கை அடிப்படையில் மின்சார சபையில் பணியாற்றும் சகல அத்தியாவசிய, அவசர மின்சார சேவை வழங்கும் ஊழியர்களும் இன்று காலை 8.30 மணிக்கு முன்னர் கடமைக்குத் திரும்ப வேண்டும். அல்லாதவிடத்து குறித்த ஊழியர்கள் தமது பணியிலிருந்து விலகிச் சென்றதாகக் கருதி நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி வள அமைச்சு அறிவித்துள்ளது. அவ்வமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே குறித்து விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தாம் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரையில் முன்னெடுத்துள்ள தொழிற்சங்கப் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என ஒன்றிணைந்த தொழிற்சங்க முன்னணி தெரிவித் துள்ளது. மேலும் கடந்த புதன்கிழமை முதல் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளபோதும் வைத்தியசாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் சேவை இடம்பெறுகிறது.
எனினும் இன்று நண்பகலுக்கு முன்னர் உரிய தீர்வின்றேல் நண்பகலுக்குப் பின்னர் பரந்துபட்ட போராட்டத்தில் ஈடுபடவுள் ளதாகவும் ஒன்றிணைந்த தொழிற்சங்க முன் னணியின் ஏற்பாட்டாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
Post a Comment