Ads (728x90)

 20ஆவது திருத்­தச்­சட்டம் மற்றும் புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான இடைக்­கால அறி க்கை ஆகிய விட­யங்கள் தொடர்­பாக ஆராய்­வ­ தற்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்­றக்­குழு எதிர்­வரும் 19ஆம் திகதி முற்­பகல் 11மணிக்கு  தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்தன் தலை­மையில் கூட­வுள்­ள­தாக அனைத்து பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. 
இதே­வேளை குறித்தபாரா­ளு­மன்றக் குழு கூட்­டத்­திற்கு முன்­ன­தாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஒருங்­கி­ணைப்புக் குழு கூட்­டத்­தினை நடத்த வேண்­டு­மெனக் கோரிக்கை விடுத்து கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சி­யான ஈ.பி.ஆர்.எல்.எப் இன் செய­லா­ளரும் வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சிவ­சக்தி ஆனந்தன் எதிர்க்­கட்­சித்­த­லை­வரும், கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான சம்­பந்­த­னுக்கும் ஏனைய பங்­கா­ளிக்­கட்­சி­களின் தலை­வர்­க­ளான செல்வம் அடைக்­கா­ல­நாதன் எம்.பி, சித்­தார்த்தன் எம்.பி ஆகி­யோ­ருக்கும் கடிதம் அனுப்­பி­யுள்ளார். 
அக்­க­டி­தத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, 
பாரா­ளு­மன்­றக்­குழு கூட்டம் தொடர்­பான உங்­க­ளது அறி­வித்தல் கடிதம் கிடைத்­தது. அர­சியல் யாப்பின் 20ஆவது திருத்தம் தொடர்­பா­கவும் புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கை தொடர்­பா­கவும் விவா­திக்­கப்­ப­ட­வுள்­ள­தாக அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. ஒரு புதிய அர­சியல் யாப்பு வர­வி­ருக்­கின்ற சூழலில் தேர்தல் சீர்­தி­ருத்­த­மான 20ஆவது திருத்தம், மற்றும் வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கை ஆகி­யவை கொள்கை முடி­வுடன் தொடர்­பு­பட்­டுள்­ளது. 
இதனால் பாரா­ளு­மன்றக் கூட்­டத்­தினை கூட்­டு­வ­தற்கு முன்­ன­தாக ஒருங்­கி­ணைப்­புக்­குழு கூட்­டத்­தினைக் கூட்டி அங்­கத்­துவ கட்­சி­களின் கருத்­த­றிந்து அதற்­கேற்ப முடி­வெ­டுப்­பதே சிறப்­பா­ன­தா­க­வி­ருக்கும். ஆகவே தாங்கள் சிறப்­பாக ஒருங்­கி­ணைப்புக் குழு கூட்­டத்­தினைக் கூட்­டு­மாறு ஈழ­மக்கள் புரட்­சி­கர விடு­தலை முன்­னணி கோரு­கின்­றது. எமது கோரிக்­கையை ஏற்று செயற்­ப­டு­வீர்கள் என்று எதிர்­பார்க்­கின்றோம் என்­றுள்­ளது .
இதே­வேளை தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் மற்­றொரு பங்­கா­ளிக்­கட்­சி­யான புளொட் அமைப்பின் தலைவர் சித்­தார்த்தன் எம்.பி. இவ்­வி­டயம் குறித்து கூறு­கையில், தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் ஒருங்­கி­ணைப்பு குழு கூட்­டத்தில் மேற்­கொள்­ளப்­படும் தீர்­மா­னது கூட்­ட­மைப்­பி­னது தீர்­மா­ன­மாக அமையும். ஆகவே இவ்­வி­ட­யங்­களில் கூட்­ட­மைப்பின் தீர்­மா­னத்­தினை எடுப்பதாயின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்படுவது சிறந்ததாக அமையும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகவுள்ளது என்றார்.
அதேவேளை ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி வெளிநாடு சென்றுள்ளமையால் தொடர்புகொள்ளமுடியாது போனமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

Recent News

Recent Posts Widget