இலங்கையின் இறைமையில் எந்த வொரு சக்தியும் தலையீடு செய்யக் கூடாது என்பதை வலியுறுத்தி சிங்கள அமைப்புக்கள் இன்று ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் முன்றலில் போராட்டத்தினை மேற்கொள்ளவுள்ளன.ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 36ஆவது கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையிலேயே இவ்வாறான போராட்டம் நடத்தப்படவுள்ளது.
இதேவேளை இலங்கை முன்னாள் கடற்படைத் தளபதியான சரத்வீரசேகர நாளை மனித உரிமைகள் பேரவையின் உபகுழுக் கூட்டமொன்றில் உரையாற்றவுள்ளார்.
கடந்த முறை நடைபெற்ற உபகுழுக் கூட்டமொன்றில் சரத்வீரசேகர பங்குபற்றியிருந்தபோது புலம்பெயர் அமைப்புக்களுடன் நேரடியாகவே முரண்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment