Ads (728x90)



சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹூவாய் ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. ஸ்மார்ட்போன் விற்பனையில் சீனாவின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹூவாய் சாம்சங் நிறுவனத்தைத் தொடர்ந்து இரண்டாவது இடம் பிடித்துள்ளது.

கவுண்ட்டர்பாயிண்ட் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் ஹூவாய் நிறுவனம் ஆப்பிளின் சர்வதேச ஸ்மார்ட்போன் விற்பனையில் முதல் முறையாக முந்தியுள்ளது. ஆய்வு மற்றும் வளர்ச்சியில் தொடர்சிசியான முதலீடு மற்றும் விளம்பரம் உள்ளிட்டவை விற்பனை அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மற்றும் ஜூலை மாத விற்பனை சார்ந்த அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், ஆகஸ்டு மாத நிலவரம் சார்ந்து எவ்வித தகவலும் இல்லை. கேலக்ஸி நோட் 8 மற்றும் ஐபோன் 8 ஸ்மார்ட்போன்களின் வெளியீடு காரணமாக ஹூவாய் நிறுவனம் கடினமான போட்டியை எதிர்கொள்ள இருக்கிறது. மேலு்ம புதிய வெளியீடு மூலம் ஆப்பிள் நிறுவனம் மீண்டும் இரண்டாவது இடத்தை பிடிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அனைவரும் வாங்கக் கூடிய விலையில் தலைச்சிறந்த சிறப்பம்சங்கள் கொண்டிருந்ததால் ஹூவாய் நிறுவன ஸ்மார்ட்போன்கள் அதிக பிரபலமாகியுள்ளன. டூயல் கேமரா, பெரிய டிஸ்ப்ளே மற்றும் சக்திவாய்ந்த சிறப்பம்சங்கள் உள்ளிட்டவையும் விற்பனை அதிகரிக்க முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன.    

தெற்கு ஆசியா, இந்தியா மற்றும் வட அமெரிக்க சந்தைகளில் அதிக பிரபலமாக இல்லாததே சாம்சங் நிறுவனத்தை முந்தி ஹூவாய் நிறுவனம் முதலிடம் பிடிக்க முடியாததற்கு முக்கிய காரணம் என கவுண்ட்டர்பாயின்ட் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ஹூவாய் நிறுவனம் தற்சமயம் சீனா, ஐரோப்பா, லத்தின் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு சந்தைகளை அதிகம் எதிர்பார்த்திருக்கிறது.

ஆப்பிள் நிறுவனம் இரண்டாவது இடத்தை இழந்திருந்தாலும், ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ் ஸ்மாப்ட்போன்கள் சர்வதேச சந்தையில் அதிகம் விற்பனை செய்யப்படுவதாக கவுண்ட்டர்பாயிண்ட் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒப்போ ஆர்11, ஒப்போ ஏ57, சாம்சங் கேலக்ஸி எஸ்8 உள்ளிட்டவை முறையே மூன்று, நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களை பிடித்துள்ளன

Post a Comment

Recent News

Recent Posts Widget