Ads (728x90)

ஐ.நா. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் மகள் இவாங்காவை  சந்தித்து பேசினார். நவம்பர் மாதம் ஹைதராபாத்தில் நடைபெறும் தொழில் முனைவு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இவாங்கா இந்தியா வர உள்ளார். இந்த பயணம் குறித்து இவாங்காவுடன் உரையாடினார். மேலும் பெண்கள் உரிமை உள்ளிட்டவை குறித்தும் அவர்கள் பேசினர்.

இதற்கிடையே ரோஹிங்கியா இஸ்லாமிய பிரச்சனைகள் வலுவடைந்து வரும் நிலையில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவையும் சுஷ்மா சந்தித்துள்ளார்.உலக பிரச்சனையாக  தீவிரமடைந்துள்ள ரோஹிங்கியா இஸ்லாமியர்களுக்கு வங்கதேசம் அளித்து வரும் ஆதரவிற்கு நன்றி தெரிவித்த அவர் இந்தியாவும் உதவிக்கரம் நீட்ட தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

வளைகுடா  நாடுகளில் உள்ள இந்தியர்களின் நிலை குறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத் துறை அப்துலப்பின் சையத் இடமும் சுஷ்மா கேட்டறிந்தார்.மேலும் லாட்வியா, பஹ்ரெய்ன், டென்மார்க் உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களையும் சுஷ்மா சந்தித்து பேசினார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget