வட கொரியாவின் அணு ஆயுத திட்டங்களுக்கு பாகிஸ்தான் உதவுகிறது என்ற சந்தேகம் உள்ளதால் அதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஐ.நா.கூட்டத்தில் கலந்து கொள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அமெரிக்கா சென்றுள்ளார்.அதையொட்டி நியூயார்க்கில் நடந்த இந்திய, அமெரிக்க, ஜப்பான் முத்தரப்பு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அவர் இந்த விவகாரத்தை வலியுறுத்தியுள்ளார். வடகொரியாவின் அணு ஆயுத திட்டங்களுகு்கு மூளையாக பாகிஸ்தான் இருக்கிறது என்ற சந்தேகம் பல நாட்களாகவே இருக்கிறது என்ற அவர், வடகொரியாவின் அணு ஆராய்ச்சி தொடா்புகளை உடனடியாக கண்டு பிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
லிபியா, வடகொரியா மற்றும் ஈரானுக்கு அணு ஆயுத ரகசியங்களை விற்பதாக பாகிஸ்தானின் அணு குண்டு தந்தை எனப்படும் அப்துல் காதீர் கான் கடந்த 2004-ல் தெரிவித்தார். ஆனால் அதற்கு அவர் மட்டுமே பொறுப்பு என பாகிஸ்தான் பின்னர் விளக்கமளித்தது.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணு விஞ்ஞானி பர்வேஸ் ஹூட்பாய், அப்துல் காதிர் கான் தனி ஒரு நாளாக அணு ரகசியங்களை விற்றார் என்பது நம்பக்கூடியது அல்ல என்று கூறி உண்மையை அம்பலப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Post a Comment