Ads (728x90)

பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் 98 வயதான ராஜ்குமார் வைஷ்யா. இவர் பாட்னாவில் உள்ள நாளந்தா திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பொருளாதாரம் தேர்வு எழுதினார். இதில் அவர் 2-ம் வகுப்பில் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளார்.

இதுகுறித்து ராஜ்குமார் வைஷ்யா கூறுகையில், ‘‘எனது நீண்ட கால கனவு நிறைவேறி உள்ளது. குழந்தைகளை வளர்த்து ஆளாக்க வேண்டிய பொறுப்பு இருந்ததால் ஏற்கெனவே நான் நினைத்ததை அடைய முடியவில்லை.

இப்போது எனது எல்லா குழந்தைகளும் நல்ல நிலைமைக்கு வந்துவிட்டனர். எனவே, எனது நிறைவேறாத கனவுகளை நிறைவேற்ற முடிந்திருக்கிறது’’ என்றார். ராஜ்குமாரின் குடும்பத்தார் அவர் எம்.ஏ. தேர்வில் வெற்றி பெற்றதால் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget