Ads (728x90)

உலகில் முதன்முறையாக, விவசாயிகளின் உதவியே இல்லாமல் இயந்திரங்கள் மூலம் செய்யப்படும் விவசாயம் இங்கிலாந்தில நடைபெற்றுள்ளது.

தானியங்கி டிராக்டர்கள் மற்றும் ட்ரோன்களின் உதவியுடன் இங்கிலாந்திலுள்ள ஹார்பர் ஆடம் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இதை செயல்முறை படுத்தியுள்ளனர்.

இதனால் இனி வரும் காலங்களில் விவசாயிகள், விவசாயம் செய்யும் இயந்திரங்களை மேற்பார்வையிட்டால் மட்டும் போதும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தொழில்நுட்ப யுகத்தில் மனிதர்களே இல்லாமல் விவசாயம் செய்வதற்கான சாத்தியத்தை வழங்குவதாக இந்த தொழில்நுட்பம் பார்க்கப்படுகிறது. மனித இனம் சுமார் 10,000 வருடங்களாக விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறது. இதில், நூற்றாண்டுக்கும் குறைவாகவே இயந்திரங்கள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மனிதர்கள் வெறும் மேற்பார்வையாளர்களாக மட்டுமே இருக்கக்கூடிய அளவில் தொழில்நுட்பம் மனிதர்களுக்கு உணவு உற்பத்தியில் இருக்கும் தொடர்பை குறைக்கத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget