ஐக்கிய நாடுகள் சபையின் 72ஆவது பொதுச்சபைக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் நோக்கில் ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் இன்று காலை ஈ.கே 651 விமானத்தினூடாக நியூயோர்க் சென்றுள்ளனர்.இதன்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட அரச தலைவர்களை ஜனாதிபதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத் தொடர் கடந்த 12 ஆம் திகதி ஆரம்பமாகியுள்ள நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 20ஆம் திகதியே பொதுச்சபையில் உரையாற்றவிருக்கிறார்.
அதேபோன்று இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மேர்க்கல், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, பிரிட்டிஷ் பிரதமர் திரேசா மே உள்ளிட்ட பல்வேறு தலைவர்களையும் சந்தித்து ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
மேலும் 20ஆம் திகதி உரையாற்றவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயற்பாடுகள், புதிய அரசியலமைப்பை உருவாக்கும் வேலைத்திட்டங்கள் போன்றவை தொடர்பாக உலகநாடுகளின் தலைவர்களுக்கு விளக்கமளிக்கவிருக்கிறார்.
Post a Comment