Ads (728x90)

இலங்கை பல்லேகலே கிரிக்கெட் மைதானத்தில் பொறிக்கப்பட்டிருந்த முத்தையா முரளிதரன் பெயர் திடீரென நீக்கப்பட்டுள்ளது.இலங்கையில் கண்டி மாவட்டத்தில் பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானம் இருக்கிறது. இந்த மைதானத்தில் சமீபத்தில் இந்தியா இலங்கை இடையேயான போட்டிகள் நடைபெற்றது.  இந்நிலையில் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் இந்த மைதானத்துக்கு முத்தையா முரளிதரன் பெயர் சூட்டப்பட்டது.

இதை தற்போது மைதான நிர்வாகத்தினர் நீக்கியுள்ளனர். இதுகுறித்து தகவல் ஏதும் தெரிவிக்காத மைதான நிர்வாகத்துக்கு முத்தையா முரளிதரனின் தந்தை சின்னையா முத்தையா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும்  விளையாட்டுத்துறை அமைச்சருடன் பேசி, இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே முத்தையா முரளிதரன் பெயர் நீக்கப்பட்டது கிரிக்கெட் ரசிகர்களிடையே சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget