மியான்மரில் ரோகிங்கிய முஸ்லிம்களுக்கு எதிரான அநீதி தொடர்ந்துகொண்டே இருக்கிறது. குழந்தைகள், பெண்கள் என எந்த பாகுபாடும் இல்லாமல் அங்கு நடக்கும் படுகொலைகள் உலகையே உறைய வைத்துள்ளது. இதனால் ரோகிங்கிய முஸ்லிம்கல் மியான்மரில் இருந்து தப்பித்து வங்கதேசத்தில் அகதிகளாகத் தஞ்சமடைந்து வருகின்றனர். இவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தைத் தாண்டி வருகிறது.இதனிடையே வங்கதேசத்தில் ரோகிங்கிய முஸ்லிம்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாமை அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா பார்வையிட்டார்.
அதன்பின் பேசிய அவர் ரோகிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக மியான்மர் அரசு பல அடக்குமுறைகளையும் வன்முறைகளையும் அரங்கேற்றி வருகிறது. புத்த மதத்தைச் சாராமல் வாழும் அப்பாவி முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறையை மியான்மர் கட்டுப்படுத்த வேண்டும். எங்கள் நாட்டுக்கு அகதிகளாக வந்துள்ளவர்கள், மீண்டும் மியான்மர் திரும்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் மீது நடத்தப்படும் எந்த வகையான வன்முறையையும், அநீதிகளையும் நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம். இந்தப் பிரச்னைக்குத் தொடர்ந்து எங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்வோம். வங்கதேசத்தில் தஞ்சம் அடைந்துள்ளவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உரிய உதவிகளைச் செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
Post a Comment