அமெரிக்க பொருளாதார விவகாரத்துறை உதவி செயலாளராக இந்திய வம்சாவளி பெண் மணீஷா சிங்கை நியமனம் செய்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறையில் பொருளாதார விவகாரங்களுக்கான உதவி செயலாளராக பணியாற்றி வந்தவர் சார்லஸ் ரிவ்கின்.இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதை தொடர்ந்து சார்லஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த பதவிக்கு தற்போது இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் வக்கீல் மணீஷா சிங்(45) என்பவரை அதிபர் டிரம்ப் நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தை பூர்விகமாக கொண்ட மணீஷா சிங், குழந்தையாக இருக்கும் போதே அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திற்கு பெற்றோருடன் சென்றுவிட்டார். அங்குள்ள மயாமி பல்கலைக்கழகத்தில் பிஏ படித்தார். வாஷிங்டன் சட்டக்கல்லூரியில் எல்எல்எம் முடித்து வக்கீலாக பணியாற்றி வந்தார். தற்போது அமெரிக்க செனட்டர் டான் சுலிவானுக்கு தலைமை வக்கீல் மற்றும் ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் மணீஷாவை பொருளாதார விவகாரங்களின் உதவி செயலாளராக நியமித்து அதிபர் டிரம்ப் பரிந்துரை செய்துள்ள கடிதம் நேற்று முன்தினம் செனட்டின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. செனட் ஒப்புதல் அளித்ததும் மணீஷா அந்த பதவியில் முறைப்படி நியமிக்கப்படுவார்.
Post a Comment